Shop – New Century Book House https://ncbhpublisher.in Sat, 08 Mar 2025 05:46:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Shop – New Century Book House https://ncbhpublisher.in 32 32 English Cursive Writing 3rd Std https://ncbhpublisher.in/product/english-cursive-writing-3rd-std/ Sat, 08 Mar 2025 05:46:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37482 Thamizh-Ezhuthu-Payirchi UKG https://ncbhpublisher.in/product/thamizh-ezhuthu-payirchi-ukg/ Sat, 08 Mar 2025 05:36:11 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37473 English Cursive Writing 5th std https://ncbhpublisher.in/product/english-cursive-writing-5th-std/ Sat, 08 Mar 2025 05:31:01 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37470 Thamizh-Ezhuthu-Payirchi 5th std https://ncbhpublisher.in/product/thamizh-ezhuthu-payirchi-5th-std/ Sat, 08 Mar 2025 05:28:28 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37467 Modern Arithmetic Tables https://ncbhpublisher.in/product/modern-arithmetic-tables/ Sat, 08 Mar 2025 05:25:33 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37464 English-cursive-writing-UKG https://ncbhpublisher.in/product/english-cursive-writing-ukg/ Sat, 08 Mar 2025 05:23:49 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37461 Thamizh Ezhuthu Payirchi 1st std https://ncbhpublisher.in/product/thamizh-ezhuthu-payirchi-1st-std/ Sat, 08 Mar 2025 05:19:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37457 Tholkappiya Ilakkana Marabu https://ncbhpublisher.in/product/tholkappiya-ilakkana-marabu/ Tue, 28 Jan 2025 10:19:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37214 Edition : 1 ISBN : 9788198115522 Category : Sanga ilakkiyam Author : க.பாலசுப்பிரமணியன் Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 68 Code no : A5250]]> பெரும் புகழ்த் தொல் காப்பியத்தில் தோய்ந்து ஆழ்ந்து தொடர்ந்து ஆய்ந்துவருபவர். இங்ஙன் தொல்காப்பியத்தில் ஆழங்காற்பட்ட அவர் 1972-2008 காலப் பகுதியில் எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள தொல்காப்பிய இலக்கண மரபு என்னும் இந்நூல் தொல்காப்பிய ஆய்வு வரலாற்றிற்கு இன்றியமையாத பங்களிப்பை நல்கியுள்ளது எனலாம்.
வ. ஜெயதேவன் பேராசிரியர்-தலைவர் (பணிநிறைவு) தமிழ்மொழித்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்
இந்த நூலில் நவமணிகள் என மின்னிச் சுடர்விட்டு மேலோங்கித் திகழும் ஒன்பது கட்டுரைகளும் தொல்காப்பியத்தை அதன் அடி ஆழத்தின் அப்பாலுக்கும் அப்பால் சென்று துழாவிச் சிந்தித்துத் தெளிந்து சொன்ன சுடர்மிகு சிந்தனை முத்துகளாகும்.

]]>
பழம்பெரும் தமிழ்ச் சமூகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae/ Sat, 11 Jan 2025 09:26:45 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37083 Edition : 1 ISBN : 9788198410627

Category : History Author : K.N. Balan (Kanniyanbalan) Weight : 250.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 248 Code no : A5324

]]>
பழம்பெரும் தமிழ்ச் சமூகம்

கணியன்பாலன்

கணியன்பாலன்

கணியன் பாலன் ஒரு பொறியாளர்; வரலாற்று ஆய்வாளர்; எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர். பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’

என்ற மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு நூலின் மூலம்

சங்ககாலச் சமூகத்தின் பெருஞ்சிறப்புமிக்கப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியதோடு, அக்காலகட்டத்தையும் அதன் ஆட்சியாளர்களின் காலங்களையும், சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத் தரவுகள், வெளிநாட்டு,

உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்ற பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தவர். சங்ககாலம் குறித்த வேறுபல தரவுகள் குறித்தும் இவரது ஆய்வு நூல் விரிவாகப் பேசியுள்ளது. இவ்வாய்வு நூலின் சுருக்கம் தான் ‘பழம்பெரும் தமிழ்ச் சமூகம்’ என்ற இந்நூல்.

இந்நூல் போக பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, சாதியின் தோற்றம், கேரள வரலாறு, தொல்கபிலர் – தமிழ் அறிவுமரபின் தந்தை போன்ற வேறு பல நூல்களையும் எழுதியவர். 1000 (கி.மு. 1000 – கி.பி.

250) ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் முன்னணிச் சமூகமாக இருந்த பழம்பெரும் தமிழ்ச்சமூகத்தின் பழஞ்சிறப்புகளை பல்வேறு பரிமாணங்களில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களை உணர்ந்து, சாதி மத

வேறுபாடுகளைக் கடந்து அனைவரும்

தமிழ் தேசத்தவராக ஒன்றிணைய வேண்டும் என்பதே இவரின் வேண்டுகோள். இந்நூலின் இறுதியில் இவரது நூல்களின் பட்டியல் உள்ளது.

கீழடி அகழாய்வுக்குப் பின், சங்ககாலம். அதன் ஆட்சியாளர்கள். புலவர்கள்.

ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.

2000 வருடங்களுக்கு முன்பே அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து. உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று. வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் பழந்தமிழகத்தில் உருவாகியிருந்தன எனவும், அதன் காரணமாக உலக நாடுகளோடு செய்துவந்த வணிகத்தில் கி.மு.600 – கி.பி.150 வரை. 750 வருடங்களாக பழந்தமிழகம் ஒரு மேன்மையான இடத்தில் இருந்து வந்ததோடு இதே காலகட்ட மகதப்பேரரசை விட பல துறைகளில் உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாகவும் இருந்து வந்தது எனவும் இந்நூல் உறுதி செய்துள்ளது.

கி.மு.800 முதல் கி.பி. 250 வரை, 1000 வருடங்களுக்கும் மேலாக பழந்தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் பெருவளர்ச்சி பெற்று, உலகின் பெருநகரங்களைக் கொண்டதாகவும், பேரளவான உற்பத்தியும் பெருஞ்செல்வமும் பெருவளமும் கொண்ட உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்து வந்தது. இவை போன்ற பழந்தமிழ்ச் சமூகம் குறித்தப் பல்வேறு தரவுகளும் இந்நூலில் சான்றுகளுடன் வழங்கப்பட்டுள்ளன என்பதால் பழந்தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இந்நூல் வழங்கவல்லது

]]>
கடலும் நீர்குருவியும் (பஞ்ச தந்திரக் கதை நாடகங்கள் ) https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ Sat, 11 Jan 2025 09:08:12 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37079 Edition : 1 ISBN : 9788198410610

Category : Drama Author : Sugumaran Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 68 Code no : A5331

]]>
வெகுகாலமாக அனைவராலும் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையிலாகவும் அமைந்த பஞ்சதந்திரக் கதைகளை அறிந்திராதவர்கள் குறைவு. விலங்குகள் மூலமாக நீதியை போதிக்கும் பஞ்சதந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வமூட்டுபவை. இன்றைய தலைமுறைச் சிறார்கள் படித்து மகிழ்வதற்காக பஞ்சதந்திரக் கதைகளில் 23ஐத் தேர்ந்தெடுத்து அவற்றை நாடக வடிவில் இந்நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மற்றும் ஊர் விழாக்களில் சிறார்கள் நாடகமாக அரங்கேற்றி மகிழ்வதோடு பார்வையாளர்களையும் இன்புறச் செய்யலாம்.

]]>