Search

-10%

தமிழகத்தில் இசைக்கலைஞர்கள் நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்:நிகழ்த்துக்கலை வரலாறும் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்

243.00

  • Book Title : தமிழகத்தில் இசைக்கலைஞர்கள் நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்:நிகழ்த்துக்கலை வரலாறும் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்  (Thamizhagaththil isaikalaignargal natanakaarigal mattrum naadaga nadigargal)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749636
  • Author : S.Jeyaseela Stephen
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 238
  • Code no : A5119
Qty
Compare

In Stock

தமிழகத்தில் இசைக்கலைஞர்கள் நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்:நிகழ்த்துக்கலை வரலாறும் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்

இந்நூல் தமிழ்நாட்டின் இசை நடனம் நாடகம் ஆகியனவற்றின் வரலாற்றையும் இடைக்காலம் முதல் நவீனகாலம் வரை மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு விடையளித்தது என்பதையும் அலசி ஆராய்கிறது. நிகழ்த்துக் கலைகளின் தகுதி மற்றும் அதன் சிறப்பை எதிரொலிப்பதோடு ஐரோப்பியத் தொடர்புகளின் மூலமாகப் பயனுள்ள உரையாடல்களையும் அறிமுகப்படுத்துகிறது. இதுவுமன்றி புதுமையான மற்றும் நுட்பமான இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள், நாடக நடிகர்கள் வாழ்க்கை முறை காலனியச்சூழல் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஐரோப்பிய மதப்பரப்பாளர்களின் தொடர்பால் கிறித்தவ தேவாலய இசை வளர்ந்தது பற்றியும் கிழக்கிந்தியக் குழுமத்தின் மூலமாகப் படை த்துறை (இராணுவ) இசை வளர்ச்சி பற்றியும் தெளிவுபடுத்துகிறது. நடன வடிவங்கள். நாடக வகைகள், மற்றும் சமூகத்தின் பங்கு பற்றியும் விரிவாக வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் தொல் மரபிலிருந்து மாற்றம் கண்டு. காலத்தால் அழிக்க முடியாத மாண்பு பெற்று விளங்கிய இசை, நடனம், நாடகத் தமிழ் கலைஞர்களின் பணியையும் கலை வளர்ச்சியையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சுவையாக இந்நூல் புதுமையாக ஆராய்கிறது.
முன் அட்டைப்படம்: சென்னையில் நடனமாடும் இரு தேவதாசிப் பெண்கள்: நவாப் முகமது அலியின் பிரிட்டிஷ் ஓவியர் டில்லி கெட்டில் 1789ல் வரைந்த முரட்டுத்துணி எண்ணெய் ஓவியம் (தேசீய கலைக்கூடம், புதுடெல்லி)

Back to Top