Search

-8%

செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும்

165.00

  • Book Title : செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும் (Semmozhithakuthiyum Sempathippu Thevaiyum)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9789388973441
  • Author : R.Venkatesan
  • Weight : 100.00gm
  • Language : Tamil
  • Publishing Year : 2019
  • Pages : 187
  • Code no : A4170
Qty
Compare

In Stock

செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும்

நீண்ட நெடிய இலக்கிய, இலக்கண உருவாக்க மரபைக் கொண்ட ஒரு மொழியில், ஒரு காலத்துப் புலமை மரபினரின் இலக்கண, இலக்கிய ஆக்கங்கள் பல்வேறு வடிவங்களில் (வாய்வழி, ஓலைச்சுவடி, தாட்சுவடி, அச்சுப்பதிப்பு), பல்வேறு சூழல்களை எதிர்கொண்டு பயணித்து வரும். அந்த ஓட்டத்தில் இடைச் செருகல்கள், வேறுபாடுகள், திருத்தங்கள், வலிந்து புகுத்தும் கருத்துக்கள் போன்றன மூல நூலோடு இரண்டறக் கலந்து, எது உண்மைப் பாடம், எது இடையில் சேர்ந்த பாடம் என்று எளிதில் கண்டறிய முடியாத நிலையை அவை பெற்று விடுகின்றன. இவற்றைப் பற்றிய விவாதக் குறிப்புகள் தமிழ் உரைமரபு தொடக்கமாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றை உரிய தரவுகளுடன் விவாதித்துச் செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு ஆக்கத்திற்குச் செய்யவேண்டிய பணிகளை ‘செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும்’ என்னும் கட்டுரை முன்வைக்கிறது. இத்துடன் பழந்தமிழ் நூல்கள் தொடர்பான எட்டு ஆய்வுக் கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் பல்வேறு ஆய்வுகளுக்குரிய முடிச்சுகளைக் கொண்டவை.

Back to Top