Search

-10%

பழந்தமிழர் வணிகம்

330.00

  • Book Title : பழந்தமிழர் வணிகம்  (Pazhanthamizhar Vanigam)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749612
  • Author : K.N.Balan Kaniyanbalan
  • Weight : 300.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 276
  • Code no : A5128
Qty
Compare

In Stock

பழந்தமிழர் வணிகம்

கி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு, 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை. கார்டன் சைல்டு (V.Gordon Chide) போன்ற தொல்லியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அதனை உறுதி செய்யும்வகையில் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட தமிழக நகர அரசுகள் மிகச்சிறந்தனவாக, வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.
பழந்தமிழ்நாட்டில் இருந்த அளவு கல்வியறிவும், எழுத்தறிவும், அறிவியல் தொழில் நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும் மகதப்பேரரசில் இருக்கவில்லை. உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் என்பது பெருமளவு பழந்தமிழ்நாடு வழியேதான் நடந்தது என்பதை இந்நூல் உறுதி செய்துள்ளது. இவ்வளர்ச்சிகளால் தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பழந்தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி. மௌரியப் பேரரசின் பெரும்படையைத் தோற்கடிக்க முடிந்தது.
பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிக வளர்ச்சி, உள்நாட்டு வணிக வளர்ச்சி ஆகியன குறித்தப் பல்வேறு தரவுகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிகத்திற்கு மிக முக்கியக் காரணியாக இருந்த தொழில்நுட்ப மேன்மை குறித்தும், நாணயங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. அன்றைய முக்கியத் துறைமுகங்கள், வணிக நகரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி முதலியன குறித்தும், அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்கள். வணிகம். முதலியன குறித்தும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த வணிகத்தரவுகள், சாங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள வணிகம் குறித்தான தரவுகள் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது…
பழந்தமிழ்நாட்டின் கடல்வணிகம் குறித்த வெளிநாட்டு அறிஞர்களின் பல்வேறு குறிப்புகளும் விளக்கங்களும் இந்நூலில் பேசப்பட்டுள்ளன..பழந்தமிழ் நாட்டின் உலகளாவிய வணிகவளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த வானியல் குறித்தும், மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு குறித்தும் இந்நூல் எடுத்துரைத்துள்ளது.
இறுதியாக, பழந்தமிழ்ச்சமூகம் பல்வேறு துறைகளிலும் பேரளவான வளர்ச்சியைப் பெற்று. தனது உலகளாவிய வணிகத்தைக்கொண்டு. பெரும்பொருள்வளமும் செல்வவளமும் கொண்ட நாடாக இருந்தது என்பதோடு உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்தது என்பதை இந்நூல் பலவகையிலும் உறுதி செய்கிறது.

Back to Top