Search

-10%

முன்னத்தி: சமூக வரலாற்று நாவல்

612.00

  • Book Title : முன்னத்தி  (Munnathi)
  • Edition : 1
  • Category : Novel
  • ISBN : 9788197595974
  • Author : Mark
  • Weight : 300.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 540
  • Code no : A5113
Qty
Compare

In Stock

முன்னத்தி: சமூக வரலாற்று நாவல்
I am sure the Jesuits working in these two Provinces will be inspired by the vision and commitment of Fr. Trincal, who served the people of Tamil Nadu during a trying period, marked by opposition from local vested interests, internal strife within the Church between Padruado and Propaganda, colonial rule, political unrest, widespread poverty and immense suffering caused by famines and plagues.
Arturo Sosa, S.JJ. Superior General, Rome
கத்தோலிக்கத் திருஅவையால் மறக்கப்பட்ட திரிங்காலின் வரலாற்றை ஆவணக் காப்பகங்களில் கிடைத்த தரவுகளைக்கொண்டு நெய்யப்பட்டுள்ள புனைவுகளற்ற பெருங்கதை இது. உடல்தளர்ந்த காலத்தில் தான் மிகவும் நேசித்த வபுதுப்பட்டி மண்ணில் தனது உடலைப் புதைக்க தானே குழிவெட்டிக்கொண்ட திரிங்காலின் தன்னலமற்ற உயிரோட்டமுள்ள வரலாறு மீண்டும் இந்த நெடுங்கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி பேராயர், மதுரை உயர் மறைமாவட்டம், தலைவர்.
திரிங்கால் அடிகள் 1844 ஆம் ஆண்டு சென்னை வருகிறார். நாவலில் புதிய மறைப்பணித்தளத்தின் வளர்ச்சி, இயேசு சபையும் அடிக்கும் எதிர்கொண்ட சவால்கள் இவை நாவலின் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடையாக, கனன்று கொண்டிருக்கும் புரட்சித் தீயாக அமைந்து வரலாற்று நிகழ்வுகளைச் சிறப்புடன் படம்பிடித்துக் காட்டுகிறது.
அருட்பணி. டேனிஸ் பொன்னையா. சே.ச.
12 நாவல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை பணி. மாற்கு அவர்கள் படைந்திருந்தாலும் இந்த நாவல் மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன திருஅவை வரலாறை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளது பாராட்டுக்குரியது.
செபமாலை ராசா சே.ச. சென்னை
நாவலின் மையப் பாத்திரமான திரிங்கால் தமிழ்நாட்டில் வாழ்ந்தது 19ஆவது நூற்றாண்டில். ஆனால் இந்தக் கால எல்லையில் இருந்து பின்னோக்கிப் பயணித்து சில ஆளுமைகள் சாமானியர்கள் ஆகியோரை அறிமுகம் செய்வதுடன் பதினாறு பதினேழாம் நூற்றாண்டு சமூக நிகழ்வுகளை அவர்களின் துணையுடன் நம் கண்முன்னே நிறுத்துகிறார்,
ஆ.சிவசுப்பிரமணியன்

Back to Top