Search

-10%

கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம்

473.00

  • Book Title : கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (Gramci: Puratchiyin Ilakkanam)
  • Edition : 1
  • Category : Marxism
  • ISBN : 9788123431796
  • Author : S.V.Rajadurai
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2016
  • Pages : 630
  • Code no : A3481
Qty
Compare

In Stock

கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம்

இளமைக்காலத்தில் கிராம்ஷி அனுபவித்த வர்க்க, தேசிய இன ஒடுக்குமுறைகள்; பல்கலைக்கழகக் காலத்தில் தத்துவ, அரசியல் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த ஆர்வம்; தத்துவத்தை நடைமுறையுடன் இணைப்பதற்கான தேடல்கள்; மார்க்ஸிய லெனினியத்தை இத்தாலியின் தூலமான நிலைமை களுக்கேற்ப அவர் பயன்படுத்திய பாங்கு; பொருள் உற்பத்தி, பண்பாடு, அரசியல் ஆகிய அனைத்து நிலைகளிலும் பட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகத் தொடங்கப் பட்ட தொழிற்சாலை கவுன்சில்கள் இயக்கம்; இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடந்த தத்துவப் போராட்டங்கள்; பாசிசம் குறித்த ஆழமான புரிதல்; கூர்மையான வர்க்கப் பகுத்தாய்வுகள்; லெனின், த்ரோத்ஸ்கி, புகாரின், ஜினோவீவ், காமனேவ், லூனாசார்ஸ்கி, ஸ்டாலின் போன்ற போல்ஷ்விக் தலைவர்களுடன் இருந்த உறவுகள்; கம்யூனிஸ்ட் அகிலத்தின் பாத்திரம்; கம்யூனிஸ்ட் கட்சி இயங்க வேண்டிய முறை பற்றிய கருத்துகள்; கருத்து முதல்வாதத்திற்கும் யாந்திரிகப் பொருள்முதல்வாதத்திற்கும் எதிரான விமர்சனங்கள்; பொதுவாக ஐரோப்பிய பண்பாடு குறித்தும், குறிப்பாக இத்தாலிய பண்பாடு குறித்தும் அவர் கூறிய கருத்துகள்; ஆதிக்க வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளும் கருத்துநிலை மேலாண்மை, குடிமைச் சமுதாயம் ஆகியன குறித்த புதுமையான விளக்கங்கள்; தொழிலாளர் விவசாயி நேச அணி என்னும் லெனினிய மார்க்கத்தை வளர்த்தெடுக்கும் முயற்சி: பாசிச ஒடுக்குமுறையின் கீழ் புரட்சிகரப் பாட்டாளிவர்க்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள்; சிறைபுகு முன்னும் சிறையிலிருந்தும் எழுதப்பட்ட கடிதங்களின் தத்துவ, இலக்கியத் தன்மைகள்; இந்தியச் சூழலில் கிராம்ஷி -என பத்தொன்பது பகுதிகளாக விரிகிறது இந்நூல்.

Back to Top