Search

சீன பண்பாடு தத்துவ சிந்தனை / Seena Panbaadu Thaththuva Sindhanai

350.00

ISBN : 9788123439563
Author : Vu Soon
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4319

Qty
Compare

In Stock

ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தத்துவச் சிந்தனைகளைக் கொண்டது சீனத் தத்துவம். இதில் கன்ஃபியூசியனிஸம், தாவோயிஸம் ஆகிய இரண்டும் அடிப்படையானவை. உலக மனிதர் யாவருக்கும் பண்பாடே அவசியம் என்று வலியுறுத்துகிறது சீனத்தத்துவம். பழமைவாய்ந்த இந்தத் தத்துவம் உலகின் இயல்பு, பொருள்களுக்கு இடையேயான தொடர்பு, சமூக நெறிகள், மானுட வாழ்வு செல்ல வேண்டிய திசை. அறிவின் கட்டமைப்பு ஆகிய ஐந்து அடிப்படைக்
கூறுகளை முன்வைத்து விவாதத்தை நடத்துகிறது.

மேற்கு நாட்டுத் தத்துவங்களின் தாக்கத்தால் சீனத் தத்துவத்தின் உண்மையான நிலைப்பாடு தன் சாரத்தில் மங்கிப் போகிறது என்பதைக் கண்டறிந்து, பிற தத்துவங்களின் பொருந்தாக் கூறுகளைக் களையும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது – இந்த நூல். அதே வேளையில், பிற நாடுகளின் பண்பாடுகளுடன் ஒப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Back to Top