Novel – New Century Book House https://ncbhpublisher.in Sat, 11 Jan 2025 09:26:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Novel – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பழம்பெரும் தமிழ்ச் சமூகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae/ Sat, 11 Jan 2025 09:26:45 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37083 Edition : 1 ISBN : 9788198410627

Category : History Author : K.N. Balan (Kanniyanbalan) Weight : 250.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 248 Code no : A5324

]]>
பழம்பெரும் தமிழ்ச் சமூகம்

கணியன்பாலன்

கணியன்பாலன்

கணியன் பாலன் ஒரு பொறியாளர்; வரலாற்று ஆய்வாளர்; எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர். பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’

என்ற மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு நூலின் மூலம்

சங்ககாலச் சமூகத்தின் பெருஞ்சிறப்புமிக்கப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியதோடு, அக்காலகட்டத்தையும் அதன் ஆட்சியாளர்களின் காலங்களையும், சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத் தரவுகள், வெளிநாட்டு,

உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்ற பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தவர். சங்ககாலம் குறித்த வேறுபல தரவுகள் குறித்தும் இவரது ஆய்வு நூல் விரிவாகப் பேசியுள்ளது. இவ்வாய்வு நூலின் சுருக்கம் தான் ‘பழம்பெரும் தமிழ்ச் சமூகம்’ என்ற இந்நூல்.

இந்நூல் போக பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, சாதியின் தோற்றம், கேரள வரலாறு, தொல்கபிலர் – தமிழ் அறிவுமரபின் தந்தை போன்ற வேறு பல நூல்களையும் எழுதியவர். 1000 (கி.மு. 1000 – கி.பி.

250) ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் முன்னணிச் சமூகமாக இருந்த பழம்பெரும் தமிழ்ச்சமூகத்தின் பழஞ்சிறப்புகளை பல்வேறு பரிமாணங்களில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களை உணர்ந்து, சாதி மத

வேறுபாடுகளைக் கடந்து அனைவரும்

தமிழ் தேசத்தவராக ஒன்றிணைய வேண்டும் என்பதே இவரின் வேண்டுகோள். இந்நூலின் இறுதியில் இவரது நூல்களின் பட்டியல் உள்ளது.

கீழடி அகழாய்வுக்குப் பின், சங்ககாலம். அதன் ஆட்சியாளர்கள். புலவர்கள்.

ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.

2000 வருடங்களுக்கு முன்பே அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து. உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று. வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் பழந்தமிழகத்தில் உருவாகியிருந்தன எனவும், அதன் காரணமாக உலக நாடுகளோடு செய்துவந்த வணிகத்தில் கி.மு.600 – கி.பி.150 வரை. 750 வருடங்களாக பழந்தமிழகம் ஒரு மேன்மையான இடத்தில் இருந்து வந்ததோடு இதே காலகட்ட மகதப்பேரரசை விட பல துறைகளில் உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாகவும் இருந்து வந்தது எனவும் இந்நூல் உறுதி செய்துள்ளது.

கி.மு.800 முதல் கி.பி. 250 வரை, 1000 வருடங்களுக்கும் மேலாக பழந்தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் பெருவளர்ச்சி பெற்று, உலகின் பெருநகரங்களைக் கொண்டதாகவும், பேரளவான உற்பத்தியும் பெருஞ்செல்வமும் பெருவளமும் கொண்ட உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்து வந்தது. இவை போன்ற பழந்தமிழ்ச் சமூகம் குறித்தப் பல்வேறு தரவுகளும் இந்நூலில் சான்றுகளுடன் வழங்கப்பட்டுள்ளன என்பதால் பழந்தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இந்நூல் வழங்கவல்லது

]]>
37083
கடலும் நீர்குருவியும் (பஞ்ச தந்திரக் கதை நாடகங்கள் ) https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ Sat, 11 Jan 2025 09:08:12 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37079 Edition : 1 ISBN : 9788198410610

Category : Drama Author : Sugumaran Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 68 Code no : A5331

]]>
வெகுகாலமாக அனைவராலும் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையிலாகவும் அமைந்த பஞ்சதந்திரக் கதைகளை அறிந்திராதவர்கள் குறைவு. விலங்குகள் மூலமாக நீதியை போதிக்கும் பஞ்சதந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வமூட்டுபவை. இன்றைய தலைமுறைச் சிறார்கள் படித்து மகிழ்வதற்காக பஞ்சதந்திரக் கதைகளில் 23ஐத் தேர்ந்தெடுத்து அவற்றை நாடக வடிவில் இந்நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மற்றும் ஊர் விழாக்களில் சிறார்கள் நாடகமாக அரங்கேற்றி மகிழ்வதோடு பார்வையாளர்களையும் இன்புறச் செய்யலாம்.

]]>
37079
இந்தியா வென்றது (2024 – நாடும் நாடாளுமன்றத் தேர்தலும் ) https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-2024-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/ Sat, 11 Jan 2025 08:56:36 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37074 Edition : 1 ISBN : 9788198429544

Category : Articles Author : Nirajan Megon Weight : 300.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 470 Code no : A5341

]]>
இந்தியா வென்றது

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையை இந்திய மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை திண்ணமாக வெளிப்படுத்துகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது. இந்தியாவின் அடிப்படை நாதம் கூட்டாட்சி தத்துவம் தான். அதை இந்த நாடாளுமன்ற தேர்தலில் அழுத்தமாக உறுதி செய்து இருக்கிறார்கள் இந்திய வாக்காளர்கள். டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக வேலை பார்த்த அனுபவத்தின் வாயிலாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லாயிரம் கிலோமீட்டர் செய்த பயணத்தின் விளைவாகவும், நான் கண்ட, கேட்ட, உணர்ந்த அத்தனை தகவல்களையும் பகுத்தாய்ந்து திரட்டி மக்கள் முன் கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துப் பார்த்து எழுதி தற்போது இதைப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.

இதில் இடம்பெற்றிருக்கும் அத்தனை சம்பவங்களும் உண்மையில் நடந்தவை.

]]>
37074
பெருங்கற்கால ஈமக்காடு நரசிங்கம்பட்டி என்னும் பழையூர் மேற்பரப்புக் கள ஆய்வு https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%88%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b0/ Sat, 11 Jan 2025 07:28:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37069 Edition : 1 ISBN : 9788198363862

Category : History Author : M. Paramasivan & R. Govindaraj Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 168 Code no : A5328

]]>
பெருங்கற்கால ஈமக்காடு

மா.பரமசிவன் & ரே.கோவிந்தராஜ்

மதுரை, தியாகராசர்

கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மா.பரமசிவன் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். 2011 முதல் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், பழந்தமிழ் இலக்கியம், மரபிலக்கணம், பதிப்பு, உரை, தொல்லியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். அகநானூற்று

உரைவேறுபாட்டுக் களஞ்சியம் இவர்தம் உழைப்பிற்குச் சான்று பகர்வதாகும். 2009 முதல் ஆய்வுப் பங்களிப்புச் செய்துவரும் இவர் தற்போது வரை 10 ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்;

4 நூல்களைப் பதிப்பித்து உள்ளார்; 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். சமூக வரலாற்றுப் பின்புலத்தில் ஆய்வு செய்யும் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளர்களுள் இவரும் ஒருவர்.

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை தொல்லியல் ஆய்வுகளுக்குச் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான இட்டு நிரப்பும் தரவுகளைக் கொண்டு உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை… உரையாசிரியர்கள் வரை இந்தப் போக்கைக் காணலாம். ஆய்வறிஞர்கள் ர.பூங்குன்றன், கா.ராஜன் உள்ளிட்டோர் சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்தாண்டு தொல்லியல் ஆய்வுகளின் புரிதலை வளப்படுத்தி இருக்கிறார்கள். இந்நூலின் ஆசிரியர்கள் முனைவர் பரமசிவனும், முனைவர் கோவிந்தராஜும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மிக நேர்த்தியாக நெசவு செய்திருக்கின்றனர்.

பேரா. பக்தவத்சல பாரதி

ஊர்ப் பெயராய்வு, சமூகவியல் ஆய்வு, பண்பாட்டு மானிடவியல் ஆய்வு, தமிழ்ச் செவ்வியல் ஆய்வு, தொல் எழுத்தியல் ஆய்வு, தொல் பொருள் ஆய்வு எனப் பல்துறைப்பட்ட ஆய்வுகளில் இத்தரவுகளை ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்துள்ளனர். இந்திய வரலாற்றெழுதுதலில் தொல்லியல் துறை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் என்பதில் எவ்வித ஐயமும் இதுபோன்ற நூல்கள் அதற்குப் பெருந்துணை புரியும்.

]]>
37069
பசுமை நிறைந்த நினைவுகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 10 Jan 2025 11:53:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37054 Edition : 1 ISBN : 9788123447827

Category : Articles Author : M.A. Palaniyappan Weight : 90.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 16 Code no : A5332

]]>
1980களில் ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற இந்நூலாசிரியர் இரண்டாம் உலகப் போரில் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியை பாசிசத்திற்குப் பலியாக்கிய ‘பைலோரஷ்ய’க் குடியரசின் தலைநகரான ‘மின்ஸ்க்’ நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்ற அனுபவமே இச்சிறுநூல். கணவனையும் மகனையும் அப்போரில் பறிகொடுத்த அந்நகரத்தின் ஒரு வீரத்தாய் இக் கட்டுரையாளரிடம் நிகழ்த்தும் உரையாடலில் வெளிப்படும் உறுதியான மனதிடத்தை இச்சிறுநூலில் அறிந்துகொள்ளமுடியும்.

]]>
37054
லெனின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Fri, 10 Jan 2025 11:48:51 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37050 Edition : 1 ISBN : 9788123447841

Category : Articles Author : M.A. Palaniyappan Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 32 Code no : A5334

]]>
சிந்தனையாளராயும், அறிஞராயும், எழுத்தாளராயும், அரசியல்வாதியாயும், அரசறிஞராகவும், நிர்வாகியாயும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பவராயும் அரசுக் கலை வித்தகராயும் திகழ்ந்த மேதை விளதீமிர் இலியீச் லெனின். மகத்தான அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் லெனின். உலகின் முதல் சோசலிச அரசை நிறுவி அதற்குத் தலைமை தாங்கியவர்.

* லெனின் பிறந்த நாள் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி. அவரது மறைவு 1924 ஜனவரி 27ஆம் தேதி.

இவ்வுலகில் அவர் வாழ்ந்த ஆண்டு 54 ஆண்டு.

இந்நூலில் அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

]]>
37050
ஏ.பி. ஜெ.அப்துல் கலாம் சுதந்திரம் முன்னேற்றம் தற்சார்பு https://ncbhpublisher.in/product/%e0%ae%8f-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8/ Fri, 10 Jan 2025 11:08:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37045 Edition : 1 ISBN : 9788123447834

Category : Articles Author : M.A. Palaniyappan Weight : 70.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 16 Code no : A5333

]]>
என் அன்பிற்குரிய இந்தியச் சகோதரர்களே!

நான் இந்தக் கட்டுரையை நீண்ட ஆலோசனைக்குப் பின், ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தொட்டு எழுப்ப வேண்டும் என்ற வேட்கையில், சற்றுக் கடுமையாகவே எழுதியுள்ளேன்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அவர்கள் கூறியதை சற்று மாற்றி உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இந்தியாவும் அமெரிக்கா போலவோ, மற்ற மேலைநாடுகள் போலவோ ஆகவேண்டுமானால், “நாட்டிற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நாடு உங்களிடம் எதிர்பார்க்கிறதோ அதைச் செய்யுங்கள்; நாடு உங்களுக்காக என்னென்ன செய்யும் என்று எதிர்பார்க்காதீர்கள்.”

ஏ.பி. ஜெ.அப்துல் கலாம்

]]>
37045
புரட்சி வீரன் செண்பகராமன் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9/ Fri, 10 Jan 2025 10:59:40 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37039 ஜெர்மனியைச் சேர்ந்த எம்டன் என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் பல்லாயிரம் மைல்களைக் கடந்து இந்தியக் கடற்கரைக்கு வருவானேன்? அதுவும் சென்னைக் கடற்கரையில் வந்து குண்டு போடுவானேன்? அவ்வாறாயின் அந்தக் கப்பலை இந்திய நாட்டுக்கு வழி நடத்தி வருவதற்கு துணையாய் நின்றது யார்? இந்தக் கேள்விக்கெல்லாம் உரிய பதில்தான் புரட்சி வீரன் செண்பகராமன் பிள்ளை.

]]>
37039
வையத் தலைமைகொள் ! / Vaiyath thalaimai kol ! https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/ Fri, 10 Jan 2025 06:46:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27960
  • Book Title : வையத் தலைமைகொள் ! (Vaiyath thalaimai kol !)
  • Category : Self Help
  • Edition : 6
  • ISBN : 9789388050418
  • Author : V. Iraianbu
  • Weight : 400.00 gm
  • Pages : 468
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Code no : A3966
  • ]]>
    வையத் தலைமைகொள் ! / Vaiyath Thalaimai Kol !

    துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்று ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்களே தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கமுடியும் என்ற சூழல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்.

    ]]>
    27960
    மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae/ Thu, 09 Jan 2025 12:14:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37028 Edition : 1 ISBN : 9788198401689

    Category : Articles Author : S.V. Rajadurai Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 80 Code no : A5337

    ]]>
    மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை

    படிப்பையும் எழுத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு பிணி. மூப்பைப் பொருள்படுத்தாமல் எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பன்மொழிப் புலமை, பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலின் வகித்த தலைமைப் பாத்திரம், இராபர்ட் ட்ரெஸ்ஸெல், எமிலி ஜோலா ஆகியோரின் பாட்டாளிவர்க்க நாவல்கள், ஆஃப்ரோ-அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வினின் இனவெறி எதிர்ப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

    ]]>
    37028