Russian Novels – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 06:41:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Russian Novels – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/ Fri, 18 Oct 2024 23:02:05 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27780
  • Book Title : மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்  (Marana Veetin ninaivu Kurippugal)
  • Category : Novel
  • ISBN : 9788123444109
  • Author : Fyodor Dostoyevsky
  • Translator : K. P. Koothalingam
  • Weight : 300.00 gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Page : 524
  • Code no : A4764
  • ]]>
    மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

    சிறை என்னும் ஒரு துளி உலகத்தில் வர்க்கத்தால் மற்றும் பண்பாட்டால் தாழ்வுற்றிருந்த மனிதர்களிடையே வாழநேர்ந்த ஒரு உயர்குடி மேன்மகன் அவர்களுடனான தொடக்க கால முரண்களைக் கடந்து,அவர் மெள்ள மெள்ள அந்தச் சூழ்நிலையோடு பொருந்திப் போவதின் நுட்பம், கதைப்புலத்தில், அசைவற்ற ஆழ் நதியாக நகர்ந்து போக. அதன் இருபுறமும் பிரிந்து செல்லும் கிளை ஆறுகளாக மற்ற மனிதர்களின் கதைகள் தொடர்புபெறுகின்றன.
    விலங்குச் சங்கிலிகளால்பிணைக்கப்பட்டிருக்கும்அந்த மனிதர்கள் பல வகை உளவியல் தன்மை கொண்டவர்கள். வெவ்வேறு குண இயல்புடையவர்கள் அவர்களது அச்சங்கள் உறக்க அலறல்கள். துயரங்கள் கோபங்கள் பழைய வாழ்க்கை நினைவுகள் வீட்டைப் பற்றிய ஏக்கங்கள் விடுதலைக்கான கனவுகள் என்னும் இருளடர்ந்த பாதையிலிருந்து சுதந்தரத்தின் ஒளியை நோக்கிய நெடிய வழித்தடத்தில் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு நிகழ்வையும் உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார் தஸ்தயெவ்ஸ்கி இந்த நாவலை வாசிக்கும் எந்த ஒரு மனிதரின் இதயமும் காருண்யத்தால் கனிந்துவிடும்.

    ]]>
    27780
    மேடம் பவாரி / Madam Pavari https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-madam-pavari/ Fri, 18 Oct 2024 22:50:58 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27268
    • ISBN : 9788123427386
    • Author : Kushthaw Flaffar
    • Translator : KO. Parameshwaran
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2014
    • Pages : 122
    • Code no : A3085
    ]]>
    மேடம் பவாரி / Madam Pavari
    • பிரெஞ்சு இலக்கியம் உலக இலக்கியத்துக்குப் பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில் “மேடம் பவாரி” இடம்பெறும்.
    • அது வெளிவந்தபோது இலக்கியவானில் புயலைக் கிளப்பியது, அதன் ஆசிரியர் குஸ்தாவ் ஃப்ளாபர் சமுதாயத்தின் ஒழுங்கையும் மதநம்பிக்கையையும் கெடுப்பதாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்.
    • 1870-இல் “மேடம் பவாரி” உண்மையை எழுத வேண்டும் என்ற எண்ணமுடைய எழுத்தாளர்களால் புகழப்பட்டது. எழுத்தாளர் எதையும் தீர்ப்புக் கூறக்கூடாது.
    • போதனை செய்யக்கூடாது. ஆனால், நடுநிலைமை வகிக்கவேண்டும் என்ற அவருடைய எழுத்தின் கோட்பாடு எல்லோராலும் பின்பற்றப்பட்டது. பவாரி
    ]]>
    27268
    நித்ய கன்னி / Nithya Kanni https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-nithya-kanni/ Fri, 18 Oct 2024 22:24:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25369 
    “தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை, மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமை கின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை. அந்த அனுபவங்களின் தீவிரம்தான் அவரது இலக்கியப் பிரபஞ்சத்தின் உள்ளீடு, தகழியின் கதை சொல்லும் திறனுக்கும் எளிமைக்கும் இணை சொல்ல ஏதுமில்லை. வாழ்வனுபவங்களின் மணமுள்ள பக்கங்களைத் திருப்பும்போது அக்கலைஞரின் மேதைமையை நாம் உணர்கிறோம். அவரில் உள்ள சமூக சிந்தனையாளரை – குடும்பத் தலைவரை – விவசாயியை – அப்பட்டமான மனிதரை அண்மையில் காண்கிறோம்,”

    -மன்னர்காடு மாத்யு
    (மலையாள மனோரமா ஆண்டுப் பதிப்பின் பொறுப்பாசிரியர்)

    ]]>
    25369
    வெகுளி / Veguli https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-veguli/ Fri, 18 Oct 2024 21:29:36 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23401 உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையும், போலிமையும், அற்பத் தந்திரங்களும் மேலோங்கிய ரஷ்ய நாட்டு உயர்குடிச் சமூகத்தின் மீதான புகார்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கும் இந்நாவல், வாழ்வின் நிதர்சனமான உண்மைகளை அதன் கவித்துவமான அழகுடனும் எளிமைப்பாங்கோடும் விவரித்துச் செல்கிறது.

    ]]>
    23401
    அன்னா கரீனினா / Anna Karenina 2 VOL https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-anna-karenina-2-vol/ Fri, 18 Oct 2024 21:29:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23318
  • Edition : 4
  • Category : Novel
  • ISBN : 9788123436654
  • Author : Leo Tolstoy
  • Translator : N.Dharmarajan Anna Karenina set VOL
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 1190
  • Code no : A3824
  • ]]>
    அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.

    மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.

    ]]>
    23318