Tamil Translation – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:24:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Tamil Translation – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் / Mahath Mudhal Dalith Puratchiyin Uruvakkam https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:24:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25363
  • Edition : 2
  • Category : Dalitism
  • ISBN : 9788123437279
  • Author : kamalalayan
  • Weight : 250.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2018
  • Code no : A3862
  • ]]>
    தலித் மக்களின் உணர்விலும் வாழ்க்கையிலும் மஹத் ஈடிணையற்ற தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்காக தலித்துகள் மற்றத்தில் நடத்தியதும் டாக்டர் அம்பேத்கரின் காவியத்தன்மை வாய்ந்த ஆளுமையுடன் இணைந்திருந்ததுமான அந்தப் போராட்டம் வரலாற்றில் குடிமை உரிமைக்காக நடத்தப்பட்ட முதல் போராட்டங்களிலொன்று எனக் கூறமுடியும். அவப்பேறாக, இது நாட்டார் வழக்காற்றியல் பதிவுகளுக்குள் முடங்கிப் போயிற்று. அதைப் பற்றிய விரிவான விவரணை, துண்டு துண்டாய்ச் சிதறிக் கிடக்கின்றது. அந்தச் சிதறல்களும் பெரும்பாலும் மராத்தி மொழிபிலேயே உள்ளன. பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்படியாக மஹத்தில் 1927ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டு மாநாடுகள் பற்றிய ஆவணக் காப்பகத் தரவுகள் உள்ளிட்ட பல மூலாதாரங்களைப் பயன்படுத்தி, அந்தப் போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் பரந்த அளவிலான வாசகர்களை அடையச் செய்யும் வகையில் இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மஹத் போராட்டத் தினுடைய வரலாற்று முக்கியத்துவத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக, அதை அதனுடைய வரலாற்றுச் சூழமைவில் வைத்து விளக்குவதற்கு இந்நூல் முயலுகின்றது. அந்துடன், இந்தப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து, தலித் இயக்கத்தின் எதிர்காலத் திசை வழியைத் தீர்மானிப்பதற்கான சில படிப்பினைகளைப் பெறவும் முயல்கிறது.
    மஹத்தில் முதல் மாநாட்டை முன்னின்று அமைத்து நடத்தியவரான தோழர் ஆர்.பி. மொரெவின் மூல விவரணைகள் இப்புத்தகத்தில் கூடுதல் உள்ளடக்கமாக அமைகின்றன.

    ]]>
    25363
    மனித சாரம் / Manitha Saram https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-manitha-saram/ Fri, 18 Oct 2024 22:24:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25231
  • ISBN : 9788123427287
  • Author : S.V.Rajadurai , George Thomson
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Code no : A3075
  • ]]>
    மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசை யிலிருந்து, பீத்தோவனின் செவ்வியல் இசை வரை, உழைப்பாளர் பாட்டுகளிலிருந்து ஷேக்ஸ்பியரின் கவிதை வரை – அனைத்துமே மானுட உழைப்பையே மூலாதார மாகக் கொண்டுள்ளன என்பது மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படுகிறது.

    காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ]]>
    25231
    அன்னா கரீனினா / Anna Karenina 2 VOL https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-anna-karenina-2-vol/ Fri, 18 Oct 2024 21:29:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23318
  • Edition : 4
  • Category : Novel
  • ISBN : 9788123436654
  • Author : Leo Tolstoy
  • Translator : N.Dharmarajan Anna Karenina set VOL
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 1190
  • Code no : A3824
  • ]]>
    அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.

    மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.

    ]]>
    23318