History – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:39:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png History – New Century Book House https://ncbhpublisher.in 32 32 சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/ Wed, 23 Oct 2024 07:39:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28198 சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் (chola mandala kadarkkaraiyum athan ulnadum) Edition : 2 Category : History ISBN : 9788123434872 Author : S. Jayaseela Stephen Translator : Raghu Antony Weight : 250.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 298 Code no : A3738]]> சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்

பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர அரசின்கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்ட நாயக்க குறுநில மன்னர்கள். இராணுவத்தை சார்ந்தில்லாமல், சமூகத்தினரின் தனி உரிமைகள் சம்பந்தமான சிவில் அரசை நடத்தினார்கள் என்று இந்நூல் வலுவான ஆதாரங்களோடு எண்பிக்கிறது. அப்போதைய வரலாற்றுப் புவியியலை முன்னிறுத்தி சோழமண்டலக் கடற்கரை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட வேளாண் உற்பத்தி, விவசாய உறவுகள், மற்றும் கைவினைப் பொருள் பொருளாதாரத்தையும் விளக்குகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கு பேசிய மக்கள் தங்கள் வசிப்பிடங்களை மாற்றி புதிய குடியேற்றங்கள் தமிழகத்தில் வந்த தருணத்தில் கிராம மற்றும் நகர்ப்புற இணைப்புகளை எவ்வாறு உள்நாட்டு வணிகத்தோடு ஒன்றியிருந்தது எனவும், போர்ச்சுக்கீசியர்களின் வருகையினால் கடல் வாணிபத்தில் ஏற்பட்ட
மேம்பாடு மற்றும் தாக்கங்களையும் அடையாளப்படுத்துகிறது. தமிழ்ச் சமூகம் இதனால் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் போராட்டங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

]]>
28198
டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் https://ncbhpublisher.in/product/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:35:09 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28021 3 Category : History Author : மு.நீலகண்டன் (M.Neelakandan) Pages : 204 Weight : 100.00 gm Publishing Year : 2014 Format : Paper Back Code no : A1943]]> டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் / Doctor Ambedkarum Indiya Arasiyal Chata Varalarum

திரு.மு. நீலகண்டன் திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அருகில் பாலமேடு என்னும் சிற்றூரில் 1.7.1948-இல் முனுசாமி – பட்டம்மாள் இணையர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். பாலவேடு ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும், பாலவேடு ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும் தொடக்க நடுநிலைக்கல்வி பயின்றார். சென்னை, ஜார்ஜ் டவுனில், டாக்டர் குருசாமி முதலியார் தொண்ட மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். சென்னை சர்.தியாகராயர் கல்லூரியில் PUC (கல்லூரி புதுமுக) வகுப்பு முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் B.A., Eco. (கலையியல் இளையர்) பொருளாதாரம்) / திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் M.A,. His. (கலையியல் முதியர் வரலாறு) / காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் M.Phil., (இளமுனைவர்) பட்டங்களைப் பெற்றார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள், கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 33 வருடங்கள் பணியாற்றி, அரசு துணைச் செயலாளராக பணி நிறைவு பெற்றார். தன்னுடைய பணிக்காலத்தில் அரசு அலுவலர் நலச் சங்கங்கள், அரசுப் பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், சமூக நலச் சங்கங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டு செயலாற்றியவர். தமிழ்நாடு எஸ்.சி. / எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தில் மாநில தலைமை நிலையச் செயலாளராகவும், மாநில பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் வழிகாட்டியாக செயலாற்றுகிறார்.

மேலும் இந்நூல் ஆசிரியர் தமிழில் “டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை வரலாறு” மற்றும் ஆங்கிலத்தில் “Short History of Dr.Ambedkar” என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் “சமுதாய ஆலோசனைகள் மையம்” என்ற அமைப்பின் செயலாளராக இருந்துகொண்டு மாணவர்களின் கல்வி, பொருளாதார தேவை, சமூக மேம்பாடு ஆகியவைகளை நெறிப்படுத்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.

]]>
28021
கல்வித் தந்தை காமராஜர் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d/ Wed, 23 Oct 2024 06:41:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27900 கல்வித் தந்தை காமராஜர் (Kalvi thandhai kamarajar) Edition : 3 ISBN : 9788123424125 Author : Dr.B. Balasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 86 Publishing Year : 2023 Code no : A2776]]> கல்வித் தந்தை காமராஜர்

கல்வித் தந்தை காமராஜர்  உத்தமர் என்கிற சொல்லுக்கு மறுபெயர் காமராஜர் எனலாம். ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்து, கல்வியையும் கொடுத்த மகத்தான சீலர். எல்லா தலைவர்களாலும் அன்போடும், நட்போடும் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்ட ஒருசில தலைவர் களில் ஒருவர்.
எதிர்ப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான மனித நேயமுள்ள வீரர், தமிழக முதல்வராய் இருந்து மக்களுக்கு அருந்தொண்டாற்றி மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவரின் வரலாறு இது.

]]>
27900
கௌதம புத்தர் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8c%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 23:02:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27773 கௌதம புத்தர் (Gouthama Buddhar) Category : History Author : மயிலை சீனி.வேங்கடசாமி (Mayillai Seeni. Venkatasamy) Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 174 Publishing Year : 2010 Code no : T266]]> கௌதம புத்தர்

கௌதம புத்தர் நம்முடைய நாட்டிலே தோன்றி, உலகப் புகழ்பெற்ற ஒரு பெரிய மதத்தை அமைத்து இறவாப் புகழ்பெற்ற கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிவது எல்லோருக்கும் பயனளிக்கும். பௌத்த மதத்தின் மரபின்படி இந்நூல் புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் எடுத்துரைக்கின்றது.

]]>
27773
தேச விடுதலையும் தியாகச் சுடர்களும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:56:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27496
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9789388973847
  • Author : T. Stalin Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 247
  • Publishing Year : 2014
  • Code no : A4248
  •  ]]>
    தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்

    சுதந்திரதினப் பொன்விழாவில் காலத்தேவையை நிறைவு செய்யும் வண்ணம், “தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும்’என்னும் அரிய தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
    இதன் தொகுப்பாசிரியர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். இளைய பாரதத்தின் தகுதி மிகுதி படைத்த பிரதிநிதியாவார்.

    நேரத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாது, ஊர் ஊராகச் சென்று கட்டுரையாளர்களைச் சந்தித்து, கட்டுரைகளின் நல்லாய்வின் திறமும், நம்பகத் தன்மையும் மேலிட வேண்டுகோள். சமர்பித்துக் கட்டுரைகளைத் திரட்டினார். ஒருமுறை அன்று பன்முறையும் தொடர்புகொள்ள வேண்டியிருந்தாலும், சற்றும் பின்வாங்காமல், சோர்வு பாராமல்தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் பாடுபட்டது. இந்நூலுக்குக் கிடைத்த முதற் சிறப்பாகும். இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றிய ‘கேட்டன்” லட்சுமியை வட பாரதத்தில் சந்திக்கச் சென்றார். தென் பாரதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்பதற்கு கண்கண்ட சாட்சியாக இந்நூலின் தொகுப்பாசிரியர் திகழ்கிறார்.
    சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் சுடர்களை வீரக்கரங்களில் உயர்த்திப்பிடித்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்துத் தந்த இளைஞர் பேரணியை புரட்சிகரமாகச் செயல்பட வைக்க வேண்டும் எனும் ஆராவேட்கை கொண்டவர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன்.
    பெ.சு.மணி

    ஆர்வத்தோடு, விடாப்பிடியாக தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் உழைத்தார். இதற்காக ஏறத்தாழ ‘பாரத் தரிசனமே’ செய்து விட்டார். உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்ததைக் குறிப்பிடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்களையும், சான்றுகளையும் தேடி என் தோழன் ஸ்டாலின் அலைந்தது. பலனளித்தது. பலரும் பாராட்டினர். அதுவே மன நிறைவைத் தந்தது. மேலும் பணிபுரியத் தூண்டியது. அதன் விளைவாகத்தான். மலரில் வந்த வரலாற்றுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூல் வடிவம் தந்து வெளியிடப்படுகிறது.

    நமக்காகப் போராடிய வீரத் தியாகிகளின் அரிய ஆற்றலை, தன்னலமற்ற சேவையை, இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

    ஏனெனில் இத்தகைய மாவீரர்களைப் பெற்றுத் தந்த நம்நாடு. இப்போதும் அதேபோன்று வீரத்தியாகிகளை எதிர்நோக்கித் தவம் இருக்கிறது.
    தா. பாண்டியன்

    ]]>
    27496
    அருந்ததியர் வாழும் வரலாறு https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/ Fri, 18 Oct 2024 22:51:25 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27364
  • Book Title : அருந்ததியர் வாழும் வரலாறு  (Arunthathiyar vazhum varalaru)
  • Category : History
  • Edition : 2
  • ISBN : 9788123444741
  • Author : Mark
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 404
  • Code no : A4836
  •  ]]>
    அருந்ததியர் வாழும் வரலாறு

    தமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ என்கிற நூல்தான். அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது அருந்ததியர் வாழும் வரலாறு .
    அருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் ‘மாவீர்கள்’ என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான், பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை. எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல், அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.

    கு. ஜக்கையன், எம்.ஏ.எம்.பில்., நிறுவனர், ஆதித்தமிழர் கட்சி.

    தமிழகத்தில் அருந்ததியர் குறித்தான ஆய்வுகள் அதிகம் இல்லை. காரணம் இவர்கள் வரலாறற்றவர்கள் என்பது அல்ல பொருள். மாதாக இவர்களது வரலாறு கண்டுகொள்ளப்படவில்லை. இச்சூழலில் மாற்கு அவர்கள் அருந்ததியர் குறித்த ஆய்வுகளில் களம் சார்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்களிடையே பணி செய்து மிக அணுக்கமான உறவைப் பேணி இந்நூலைப் படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள அருந்ததிய மக்களின் வாய்மொழி வரலாற்றின் மூலம் மானிட இயல் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். மேலும் அருந்ததியர்களின் மொழி, வரலாறு குறித்தாள ஆய்வுகள் நிறைய வரவேண்டியுள்ளது. இச்சூழலில் இம்மக்களின் நினைவுகளிலிருந்து செய்திகளைப் பெற்று அவற்றை மக்களின் வரலாறாகப் படைத்துள்ளதின் மூலம் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

    முனைவர் மா. காமாட்சி, வரலாற்று ஆராய்ச்சியாளர்.

    ]]>
    27364
    ஓ கனடா யாவரும் கேளிர் https://ncbhpublisher.in/product/%e0%ae%93-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:51:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27282
  • Book Title : ஓ கனடா யாவரும் கேளிர்
  • Category : History
  • ISBN : 9788123444802
  • Author :P. Muthukumaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 682
  • Code no : A4843
  •  ]]>
    ஓ கனடா யாவரும் கேளிர்

    என்றென்றுமே கனடா 90 காலனிய நாடு என்றுதான் அறியப்பட்டுள்ளது. முதலில் பிரெஞ்சுக் காலனி, பிறகு பிரிட்டிஷ் காலனி, தற்போது அமெரிக்கக் காலனி என்பர். கனடாவின் அதீத குளிரை, நிலவமைப்பை எப்போதுமே எதிர்கொண்டு களேடியர்கள் போராடும் நிலையுள்ளது. அதுபோன்றே பிரிட்டனையும், அமெரிக்க ஒன்றியத்தையும் எதிர்த்தும் கனேடியர்கள் முதலில் போராடுவர்; காலப் போக்கில் தொலைநோக்குப் பார்வையோடு ஒத்துப் போயிடுவர். இந்தக் கனேடிய இயல்பை இந்நூல் படிப்படியான பரிணாம வளர்ச்சியாகக் காட்டுகிறது.
    விரல்விட்டு எண்ணிடக்கூடிய கனேடிய அரசியல் தலைவர்களின் முயற்சியினால் 1867இல் டொமினியர் ஆஃப் கனடா பிறந்தது. அப்பொழுது ஆண்டாரியோ, கொபெக், நோவாஸ்கோசா, நியூபிரன்ஸ்வெக் மட்டுமே இணைந்திருந்தன. பரிணாம வளர்ச்சியின் காரணமாக இன்றைக்கு கனடாவின் பரந்த எல்லைகள் என தெற்கே அமெரிக்க ஒன்றியமும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், வடக்கே வடமுனையும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றியத்தின் அலாஸ்காவும் உள்ளன. இந்தப் பரிணாம வரலாற்றைத் தொடக்கம் முதல் இந்நூல் எடுத்துரைக்கிறது.

    ]]>
    27282
    அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கி.பி. 1547-1792) https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:51:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27284
  • Category : History
  • Author : S. Jeyaseela Stephen
  • ISBN : 9788195300457
  • Translators : K. Elangovan , Puthuvai Seenu. Tamil Mani
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 220
  • Code no : A4822
  • ]]>
    இந்த நூலில் போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் சுடற்கரையிலிருந்து கோவா, கொச்சி, மெலாகா, அச்சே மற்றும் மணிலாவிற்கு மேற்கொண்ட அடிமை வணிகம். ஸ்பானிஷ் வணிகர்கள் பசிபிக் கடல் கடந்து மெக்சிகோவிற்க்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பி விற்றது விவரிக்கப்பட்டுள்ளது. டச்சுக் கிழக்கிந்திய குழுமம் தமிழக அடிமைகளை வாங்கி ஜகார்த்தா. அச்சே, மெலாகா, பான்டன், மியான்மர், கேப்டவுன் மற்றும் கொழும்புக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பி வணிகம் மேற்கொண்டதும், அடிமைகளின் சமூக வாழ்வியல் உண்மைகள் பற்றியும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென்அட்லாண்டிக்கிலுள்ள புனித ஹெலினா தீவு காலனிக்கும். சுமத்ராவிலுள்ள பெங்குலுவுக்கும் அடிமைகளை ஆங்கிலக் குழுமம் ஏற்றுமதி செய்தது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து பிரஞ்சுக்காரர்கள் மொரீஷியர், ரீயூனியன். கொமோரஸ் தீவுகளுக்கு நடத்திய அடிமை வணிகம் ஆய்வு செய்யப்படுகிறது. டேனிஷ்காரர்கள் ஆட்சியின் கீழ் தரங்கம்பாடியில் அடிமை முறை, மற்றும் அடிமை வணிகம் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழகம் காலனிய ஆட்சிக்கு மாறுவது மற்றும் அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகத் தாக்கம் விரிவாக அலசப்பட்டுள்ளது. அய்ரோப்பியர்கள்

    முன் அட்டைப்படம்: அடிமை வணிகக் கப்பல் (பெம்பர்க் நூலகம், ஜெர்மனி)

    ]]>
    27284
    எங்கள் ஓருநாள் குடும்ப வாழ்க்கை / Engal Orunal Kudumpa Vazhkkai https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:50:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27277
  • Category : History
  • ISBN : 9788123426068
  • Author : Jenny Marks
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2005
  • Pages : 60
  • Code no : A1319
  •  ]]>
    எங்கள் ஓருநாள் குடும்ப வாழ்க்கை
    • எங்கள் ஓருநாள் குடும்ப வாழ்க்கை ஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும். துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர்.தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர், ஆனால் கண்ணியமானவர்….”

    -ஏங்கெல்ஸ்

    ]]>
    27277
    தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/ Fri, 18 Oct 2024 22:50:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27280
  • Edition : 1
  • Category : History
  • Author : S. Jeyaseela stephen
  • Translator : Puthuvai Seenu. Thamizhmani
  • ISBN : 9788123444772
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Pages : 280
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Code no : A4840
  •  ]]>
    தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு

    தமிழகக் கடற்கரையில் வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இங்கு வாழ்ந்த உயிரினங்கள் புதியனவாகவும் ஐரோப்பாவில் இருந்த விலங்கினங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டு இருப்பதையும் கண்டு வியந்தனர். இதனால் அவற்றைப் பற்றி கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் மேல்நாட்டாருக்கு விளக்கினர். இதுவுமன்றி பெருமளவிலான வண்ணப்படங்கள் வரைந்து அனுப்பினர். இந்த நூலில் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் தமிழ் உலகின் விலங்கினங்கள் வருகைக்குப் பின் பறவைத் தொகுதியும் பறவையியறும் (1701-1807). பூச்சியியல் மற்றும் ஊர்வனவியல்.

    வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஆய்வு (1090-1853) ஆகியன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.வியப்பிற்குரிய விலங்குகளும் விலங்கியலும் (1639-1857), பாம்புவியல் மற்றும் நச்சுயியலைப் பட்டறிவு மூலம் ஐரோப்பியர்கள் கற்றல் (1701-1853), மீனியல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைக் கூர்ந்துநோக்கல் மற்றும் அடையாளம் காணல் (1779-1853) விரிவாக அசைப்பட்டுள்ளன. ஆவணக் காப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் – குறிப்பாக இலண்டன், பெர்லின், பாரிஸ், ஹாலே. கோபன்ஹேகன். செண்பகனூர். சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகம், தஞ்சை சரஸ்வதி மகால் போன்ற இடங்களிலிருந்து சேகரித்து ஆராய்ந்து இந்த நூல் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது..

    முன் அட்டைப்படம்: தரங்கம்பாடி பச்சோந்தி. 1741 (பிரங்கி நிறுவனம். ஹாலே, ஜெர்மனி

    ]]>
    27280