P. Singaram – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:35:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png P. Singaram – New Century Book House https://ncbhpublisher.in 32 32 புயலிலே ஒரு தோணி / Puyalile Oru Thoni https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a3%e0%ae%bf-puyalile-oru-thoni/ Wed, 23 Oct 2024 06:46:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27959 3 Category : Novel ISBN : 9789388050692 Author : Pa. Singaram Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 318 Publishing Year : 2023 Code no : A4024]]> புயலிலே ஒரு தோணி / Puyalile Oru Thoni

புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோவை போல நாவலின் கதைப்போக்கில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன

ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள். நாவல் ஆக்கத்தினுக்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. எந்தவொரு காத்திரமான விஷயத்தைப் பற்றியும், புதிய பேச்சுகளை உருவாக்கிட விழையும் பகடியானது, நாவல் முழுக்கப் பதிவாகியுள்ளது. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் கண்டறிந்துள்ள சாதனை தனித்துவமானது

ந.முருகேசபாண்டியன்

]]>
27959
கடலுக்கு அப்பால் / Kadalukku Appaal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-kadalukku-appaal/ Wed, 23 Oct 2024 06:41:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27912 3 Category : Novel ISBN : 9789388050678 Author : P. Singaram Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 158 Code no : A4022]]> கடலுக்கு அப்பால்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் நெருக்கடி நிலையை மையமாக வைத்து ஒரு அற்புதமான காதலை இணைத்து புனைவாக்கப்பட்ட இந்நாவல், தமிழின் ஆகச்சிறந்த நாவல்களிலொன்று.
தமிழ்நாட்டில் பிழைப்புக்கு வழியின்றி தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்கப்போன மக்களின் வாழ்வை இரண்டாம் உலகப்போர் எப்படியெல்லாம் சிதைத்துச் சீரழித்தது என்பதன் கண்கூடான சாட்சியான இந்நாவலில் போர்க்காலச் சூழலில் வாழும் மக்களின் காதல், உன்னதம், பிரிவு. துயரம். ஆற்றாமை ஆகியவை தத்ரூபமாக அரங்கேறியுள்ளன.
ப. சிங்காரத்தின் தனித்துவமான மொழிநடையில் அமைந்த இந்நாவல் காலத்தின் விரிவெல்லைகளைக் கடந்த வாசிப்பைச் சாத்தியமாக்குகிறது.

]]>
27912