Search

-10%

தமிழ் மொழி

311.00

  • Book Title : தமிழ் மொழி  (Thamizh Mozhi)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749667
  • Author : K.N.Balan Kaniyanbalan
  • Weight : 400.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 260
  • Code no : A5127
Qty
Compare

In Stock

தமிழ் மொழி

தமிழ் ஒரு தொன்மையான செவ்வியல் மொழி என்பதையும், பரவலான கல்வியறிவையும் எழுத்தறிவையும் வழங்குவதற்கான பழந்தமிழ்நாட்டு கல்விமுறை எப்படி இருந்தது என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால நூல்களின் காலமும் அழிவும் குறித்தும், ஆகமங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. தமிழ் நூல்களின் வரலாற்றையும் (கி.மு.750-கி.பி.1800) சுருக்கமாகக் கூறுகிறது. சமற்கிருதம் தமிழோடு ஒப்பிடப்பட்டு தமிழுக்கு இணையான சிறப்பு சமற்கிருதத்துக்கு இல்லை என உறுதி செய்கிறது. தமிழ் ஓர் அறிவியல் மொழி என உறுதிசெய்யும் வகையில், தொல்கபிலர் தமிழ் அறிவுமரபின் தந்தை என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. தாய்மொழிக்கல்வி பற்றிய விரிவான ஆழமான விளக்கங்களும், தமிழ்மொழிவழிக்கல்வியின் சிறப்புகளும் இந்நூலில் பேசப்பட்டுள்ளன.
ஆங்கிலம் ஓர் இன ஆதிக்க ஆணாதிக்க மொழி என்பது குறித்தும், ஆங்கில நாட்டிலேயே, ஆங்கிலமொழி பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலைமை குறித்தும், வளர்ந்த நாடுகளில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழி முதல் இறைமொழி வரை அனைத்துமாக இருப்பது குறித்தும் இந்நூல் பேசியுள்ளது. தமிழ் ஆட்சிமொழிச்சட்டம், தமிழ்வழிக்கல்வியின் இன்றையநிலை. தமிழ்மொழியே நமது அடையாளம், பண்டைய மொழிகள். எழுத்துக்கள் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது. பொதுவாக மொழி குறித்துப் பலவகையில் விளக்குவதோடு, பண்டைய தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழ் மொழியின் இன்றைய தேவை ஆகியன குறித்த ஒரு கண்ணோட்டத்தையும் இந்நூல் வழங்குகிறது எனலாம்.

Back to Top