Search

-7%

சாயத்திரை (சுற்றுச்சூழல் நாவல்)

213.00

  • Book Title : சாயத்திரை (சுற்றுச்சூழல் நாவல்)  (Chayathirai)
  • Edition : 1
  • Category : Novel
  • ISBN : 9788197772528
  • Author : Subrabharathimanian
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 204
  • Code no : A5143
Qty
Compare

In Stock

சாயத்திரை (சுற்றுச்சூழல் நாவல்)

புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக் கொண்டாற் போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத – அல்ல. மறக்கக் கூடாத – புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை ‘சாயத்திரை’ நாவல் எடுத்துச் சொல்கிறது.
பிரேமா நந்தகுமார்
வண்ணச் சாயத்திரை போர்த்திய திருப்பூர் நகரத்தின் உண்மையைக் காட்டுகிறார் சுப்ரபாரதிமணியன். நிஜமும் மாயமுமாக, வாழ்வும் சாவுமாக அழுக்கும் அழுகலுமாக எல்லாவற்றையும் பக்கத்துக்குப் பக்கம் அடுக்கி, சாயத்திரையைக் கிழித்து சோகத்தினைக் காட்டுகிறார். உண்ணுவதும் உண்ணாததும், வாழுவதும் வீழுவதும், காதலிப்பதும் கருகிப்போவதும். சிரிப்பதும் அழுவதும் ஒரே தொனியில், ஒரே குரலில் ஒரே உணர்வில் சொல்லப்படுகின்றது. சுப்ரபாரதிமணியனின் கலை மன அதிர்வு நிரம்பவும் பக்குவப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிறது.
பொன்னீலன்

Back to Top