கவிதைக் கென்ன வேலி / Kavithaik Kenna Veli
₹72.00
- ISBN : 9788188048755
- Author : kavignar Puviarasu
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2007
- Pages : 152
- Code no : AP084
கவிதைக் கென்ன வேலி / Kavithaik Kenna Veli
கவிஞர், பேச்சாளர்,நாடகாசிரியர், வாளொலி, தொலைக்காட்சி, திரைப்படத் துறைகளில் பணியாற்றி வருபவர் இவரது ‘மூன்றாம் பிறை’ நாடகக் காவியம் தங்கப் பதக்கம் பெற்றுள்ளது கவிதைக் கென்ன வேலி.
‘முக்கூடல்’ கவிதைத் தொகுதி, தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘புல்லாங்குழலே’ கவிதைத் தொகுதி கவிக்கோ; தேவமகள், சிற்பி அறக்கட்டளை, விருதுகள் பெற்றது.
‘மிர்தாதின் புத்தகம்’ தல்வி – திசை எட்டும் பரிசு பெற்றுள்ளது.கேரள சாகித்ய புரஸ்கார் விருதும், மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார். இவரது ‘மனிதன்’ நாடகம், அனைத்து இந்திய வானொலி நிலையங்களில் 19 மொழிகளில் ஒரே சமயத்தில் ஒலிபரப்பப்பட்டது. சேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர்கய்யாம். ஓஷோ, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம் போன்ற பலரது படைப்புகளை மொழி பெயர்த்துன்னார்.ஆட்சி மொழி, பயிற்சிமொழி, தமிழக எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறைசிறைசென்றவர்.
இவரது கவிதைகள், மலையாளம்,கன்னடம், இத்தி, சிங்களம், ஆங்கிலம், ரஷ்யன், அங்கேரியம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தில் பணியாற்றிவருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள 77 வயதான இவர் எழுதியுள்ள நூல்கள் 80. வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர்.