Search

கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் / Karaiserkkum Uyirthudupaai

460.00

ISBN : 9788123417196
Author : S. Arunachalam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2103

Qty
Compare

In Stock

நூலாசிரியர் எஸ். அருணாசலம் குமரிமாவட்டம், காருபாறை என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஏறத்தாழ 12 வருடங்களாக கிராம பஞ்சாயத்தில் தலைவராக இருந்து நற்பணியாற்றியவர். 1981-ல் மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் முதல்நிலைப் பட்டம் பயில சென்னைக்கு வந்த ஆசிரியர் சென்னையிலேயே மையம் கொண்டுவிட்டார். முதுநிலைப் பட்டப்படிப்பில் சிறந்த மதிப்பெண்கள் (Outstanding Grade) பெற்று தேர்ச்சி பெற்றவர், சட்டத்தில் இளநிலைப் பட்டம் பெற்று 14-8-1991-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்ட இவர் 19 வருடங்களாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். சட்டத்தில் முதுநிலைப் பட்டம் (ML) பெற்று தற்போது ‘கிரிமினல் ஆள்வ ரையில் மாற்றுத் தீர்வு முறைகள் (Alternative Dispute Resolutions in Criminal Jurisprudence) என்ற அத்தியாயத்தில் முனைவர் (Ph.D.) பட்டத்திற்கான படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

கவுரவத்திற்குரிய திரு. மோகன் குமாரமங்கலம் என்னும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற திரு ஆர்.கணேசன், திரு.எஸ் இராமசாமி போன்ற சிறந்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற்றவர். வழக்கறிஞர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தியிடமும் சிறிது காலம் பணியாற்றினார். தொழிலாளர்கள். அரசுப் பணியாளர். காசோலை, குடும்பம். கிரிமினல், சிவில் மற்றும் நுகர்வோர் சட்டங்களில் தேர்ச்சி பெற்ற இவர் அவை சம்பந்தமாக பல வழக்குகளை நடத்தி நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். 1994-லிலிருந்து இலவசச் சட்ட உதவி மையத்தின் பட்டியலில் இடம்பெற்று ஏழைகளுக்காக ஏராளமான வழக்குகளை நடத்தியிருக்கிறார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லோக் அதாலத் உறுப்பினராக பல வருடங்களாக இருந்து நற்பணி செய்து வருகிறார். தொழிலுறவு மற்றும் தொழிலாளர் மேலாண்மை ‘ (Diploma in Industrial Relations and Personnel Management) மற்றும் வழக்குகள் மாற்று தீர்வுமுறைகள் (Diploma in ADR) இவற்றில் பட்டயப் படிப்பு முடித்து சென்னை உயர்நீதி மன்றம் தொழிலாளர் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் போன்றவற்றில் நடுவர் (Mediater) ஆக இருந்து பணியாற்றிவருகிறார். உயர்நீதி மன்றம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) ஆல் உயர்தர நடுவர் (Accredited Mediator) என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். மரண தண்ட னை மற்றும் மனித உரிமைகள் (Capital Punishment and Human rights) என்ற புத்தகத்திற்குத் தொகுப்பாசிரியராக இருந்து அதில் பொது சிவில் சட்டம் (Common Civil Court) பற்றி கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறார். பஞ்சப்படி (Deames Alowance) பற்றி தொழிற்சங்கச் செய்தியில் நாற்பதுக்கு மேற்பட்ட தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வழக்குகளை, அடிப்படையில் மனம் நிறைந்த பேச்சு வார்த்தைகளால் நல்ல தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் ஆர்வமும் நிறைந்த இவர், வழக்குகள் – மாற்றுத் தீர்வு மையம் (Society for Alternative Disputes Resolutors) என்ற இசைவு தீர்வு (Arbitration), சமரசம் (Conclation), நடுவரங்க ம் (Madiation) நடத்தும் ஒரு தனி நிறுவனத்தை நிறுவி முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.ஏ.பி. ஷா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வாய்ப்பும் பெற்றவர். இவர் Co-Author-ஆக இருந்து எழுதிய உங்கள் ஒப்பந்தங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் (Know Thy Cortract) என்ற புத்தகம் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களால் வெளியிடப்பட்டது சிறப்புக்குரியது. தற்போது மேலும் பல சட்டப் புத்தகங்களை எழுதிக்கொண்டு தொடர்பணியாற்றி வருகிறார். நல்ல சமூகச் சிந்தளையாளர்.

Back to Top